Published:Updated:

`` `XX - YY - ??'... குறியீடுகள் மூலம் பாலியல் உறவுக்கு அழைத்தார்" - வழக்கு தொடர்ந்த ஐடி பெண் ஊழியர்

பெண்
News
பெண்

தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர், குறியீடுகள் மூலம் தன்னைப் பாலியல் உறவுக்கு அழைத்தார் என ஐடி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

Published:Updated:

`` `XX - YY - ??'... குறியீடுகள் மூலம் பாலியல் உறவுக்கு அழைத்தார்" - வழக்கு தொடர்ந்த ஐடி பெண் ஊழியர்

தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர், குறியீடுகள் மூலம் தன்னைப் பாலியல் உறவுக்கு அழைத்தார் என ஐடி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

பெண்
News
பெண்

லண்டனைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் நிறுவனம்  essDOCS. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் கௌலாண்ட்ரிஸ் (Alexander Goulandris). இதே நிறுவனத்தில் ஐடி ஊழியராகவும், திட்ட மேலாளராகவும் பணியாற்றியவர் கரீனா  காஸ்பரோவா (Karina Gasparova). இவர் பணியிலிருந்தபோது  இவருக்கு நிறுவன உரிமையாளர் அலெக்சாண்டர் கௌலாண்ட்ரிஸ் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதை இந்தப் பெண் தவறாகப் புரிந்துகொண்டார்.

மெயில்
மெயில்
மாதிரிப் புகைப்படம்

அந்த மின்னஞ்சலில்,

`Can you please complete the following:

The solution us currently used by xx Agris companies and yy Barge lines in corn cargoes in south-north flows in the ???? waterways.

Also, can you remind me of what the balance of the rollout will be and the approx. timing.

Thanks’

எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மின்னஞ்சல் குறித்து விவரித்த காஸ்பரோவா `` `xx’ என்ற எழுத்துகள் முத்தங்களையும், `yy’ என்பது உடலுறவையும்,  `????’ என்ற குறியீடு, `பாலியல் உறவுக்கு எப்போது தயாராக இருப்பாய்?' என்று கேட்கும் ஒரு மறைமுகமான கேள்விகள் எனக் குறிப்பிடுகிறார். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, `என்னுடைய முதலாளி முன்வைத்த பாலியல் உறவு தொடர்பான விருப்பங்களை நான் நிராகரித்துவிட்டேன். அதற்காக என்னை அவர் திட்டினார்’ என்றும் கூறினார்.

பெண்
பெண்

இந்த வழக்கை லண்டன் மத்திய நீதிமன்றத் தீர்ப்பாயம் விசாரித்து, கரீனா காஸ்பரோவா வழங்கிய ஆதாரங்களை மதிப்பாய்வு செய்தது. அதன் பிறகு நீதிபதிகள், ``கரீனா காஸ்பரோவா ஆதாரம் இல்லாமல் அசாதாரண குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போக்கை அலுவலகங்களில் கடைபிடித்துவருகிறார். மேலும், அவருடைய புகாரில் அவரே முரண்படுகிறார். எனவே, காஸ்பரோவா essDOCS நிறுவனத்துக்கு 5,000 பவுண்டுகள் (ரூ. 513012) செலுத்த வேண்டும்" என உத்தரவிடப்பட்டிருக்கிறது.