Published:Updated:

ஏமாற்றிய முன்னாள் காதலன்: ஆண் வேடத்தில் சென்று திருமணத்தில் ஆசிட் வீசிய பெண் - சிக்கியது எப்படி?

ஆசிட் வீச்சு
News
ஆசிட் வீச்சு

முன்னாள் காதலனின் திருமணத்தில் ஆண் வேடத்தில் சென்று ஆசிட் வீசிய பெண் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

ஏமாற்றிய முன்னாள் காதலன்: ஆண் வேடத்தில் சென்று திருமணத்தில் ஆசிட் வீசிய பெண் - சிக்கியது எப்படி?

முன்னாள் காதலனின் திருமணத்தில் ஆண் வேடத்தில் சென்று ஆசிட் வீசிய பெண் கைதுசெய்யப்பட்டார்.

ஆசிட் வீச்சு
News
ஆசிட் வீச்சு

காதல் தோல்வி என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவ்வாறு காதல் தோல்வி ஏற்படும்போது அதனால் பாதிக்கப்படுபவர் சில நேரங்களில் பழிவாங்க ஆரம்பித்துவிடுகிறார். அது போன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் ஏற்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பாஸ்தர் அருகிலுள்ள சோடா அம்பால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தம்ருதர் (25). கிராமத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. இரவில் மணமக்கள் மணமேடையில் இருந்தனர்.

அந்நேரம் திடீரென மின்சாரம் தடைபட்டது. திருமண மண்டபம் முழுக்க விருந்தினர்கள் நிரம்பியிருந்தனர். அந்நேரம் மணமக்கள்மீது யாரோ ஒருவர் ஆசிட்டை வீசினர். இதில் மணமக்கள் இருவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. ஆசிட் வீசிய நபர் இருட்டில் தப்பிச் சென்றுவிட்டார்.

ஏமாற்றிய முன்னாள் காதலன்: ஆண் வேடத்தில் சென்று திருமணத்தில் ஆசிட் வீசிய பெண் - சிக்கியது எப்படி?

அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து பேன்ட், சர்ட் அணிந்த நபர் ஒருவர் தப்பிச்செல்வதை அந்தக் கிராம மக்கள் பார்த்திருந்தனர். ஆனால், இருட்டாக இருந்ததால் அவரின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.

அந்தக் கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து குற்றவாளியை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர். இது குறித்து போலீஸார், ``ஆரம்பத்தில் ஆசிட் வீசியது யார் என்று தெரியாமல் இருந்தோம். மணப்பெண்ணின் காதலன் இதை வீசியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்துப் பார்த்தோம். ஆனால், முழுமையாக விசாரித்தபோது, ஆசிட்டை வீசியது மணமகனின் முன்னாள் காதலி என்று தெரியவந்தது. அவரைக் கைதுசெய்திருக்கிறோம். யாருக்கும் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக அந்தப் பெண் ஆண் வேடத்தில் வந்து இந்த ஆசிட் வீச்சில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது'' என்றனர்.

இது குறித்து அந்தப் பெண் போலீஸில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், ``நான் பல ஆண்டுகளாக தம்ருதரை காதலித்து வந்தேன். என்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், சொன்ன சொல்லை மீறி தம்ருதர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவுசெய்தார். இது குறித்த செய்தியைக் கேள்விப்பட்டு உடனே அவரை போனில் தொடர்புகொள்ள முயன்றேன்.

ஆனால் அவர் போனை எடுத்துப் பேசவில்லை. உடனே காதலனை பழிவாங்க முடிவு செய்தேன். கிரைம் பெட்ரோல் என்ற டி.வி நிகழ்ச்சியைப் பார்த்து அதில் வருவது போன்று முன்னாள் காதலனை பழிவாங்க திட்டமிட்டேன். நான் வேலை செய்த தோட்டத்தில் சொட்டுநீர் பைப்களைச் சுத்தப்படுத்த வைத்திருந்த ஆசிட்டைத் திருடினேன்.

போலீஸ்
போலீஸ்

திருமணத்தன்று மாலை அந்தக் கிராமத்துக்கு வந்தேன். திருமணத்துக்கு வந்தவர்களோடு நின்றுகொண்டு சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இரவில் திடீரென மின்சாரம் தடை பட்டதால், அதை எனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆசிட் வீசிவிட்டு இருட்டில் தப்பிச் சென்றுவிட்டேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

போலீஸார் அவரைக் கைதுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் கபிர்தாம் என்ற மாவட்டத்தில் காதலியை பழிவாங்க வாலிபர் ஒருவர் ஹோம்தியேட்டரில் வெடிகுண்டு வைத்து திருமணப் பரிசாகக் கொடுத்தார். அது வெடித்து மணமகன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.