Published:Updated:

`டூ வீலர், வாங்கியதிலிருந்தே அடிக்கடி பழுதாகுது..!' - ஆத்திரத்தில் 35 வாகனங்களுக்குத் தீவைத்த நபர்

35 வாகனங்களுக்குத் தீவைத்த நபர்
News
35 வாகனங்களுக்குத் தீவைத்த நபர்

ராஜபாளையம் அருகே டூ வீலர்களை மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான 35 டூ வீலர்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

`டூ வீலர், வாங்கியதிலிருந்தே அடிக்கடி பழுதாகுது..!' - ஆத்திரத்தில் 35 வாகனங்களுக்குத் தீவைத்த நபர்

ராஜபாளையம் அருகே டூ வீலர்களை மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான 35 டூ வீலர்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

35 வாகனங்களுக்குத் தீவைத்த நபர்
News
35 வாகனங்களுக்குத் தீவைத்த நபர்

ராஜபாளையம் அருகே டூ வீலர் ரீ-சேல் நிறுவனத்தில் மறு விலைக்கு வாங்கிய டூவீலர் அடிக்கடி பழுதானதால் ஆத்திரமடைந்த நபர், விற்பனை நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த 35 வாகனங்களுக்குத் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது நம்மிடம் பேசியவர்கள், ``விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுபாண்டி, பழனிக்குமார்.‌ இவர்கள் இருவரும் இணைந்து டி.என்.சி.ரோடு பகுதியில் பயன்படுத்திய டூ வீலர்களை வாங்கி மறு விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.

எரிந்து நாசம்
எரிந்து நாசம்

இவர்களிடம் கடந்த டிசம்பர் 17-ம் தேதி, ஆலங்குளத்தை அடுத்த கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்த சந்தானக்குமார் என்பவர் டூ வீலர் ஒன்றை மாதத் தவணை முறையில் மறு விலைக்கு வாங்கியிருக்கிறார். தொடக்கத்திலிருந்தே அந்த டூ வீலர் அடிக்கடி பழுதானதாகத் தெரிகிறது. இது குறித்து பழனிக்குமாரிடமும், சந்தானக்குமார் புகார் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து இரண்டு மாதங்கள் தவணை கட்டிய சந்தானக்குமார், கடந்த மாதம் டூ வீலருக்கான தவணைத் தொகையைக் கட்டவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மாதத் தவணையைக் கட்டக் கோரி சந்தானக்குமாரை செல்போனில் தொடர்புகொண்டு பழனிக்குமார் பேசியிருக்கிறார். அதற்குள், `டூ வீலர் மறுபடியும் பழுதாகிவிட்டது. வண்டிக்கான செலவு அதிகமானதால் தற்போது என்னால் மாதத் தவணை கட்ட முடியாது' என சந்தானக்குமார் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு பழனிக்குமார், `வாகனப் பழுதை எங்களிடம் இருக்கும் மெக்கானிக்கிடமே சரிசெய்துகொள்ளலாம், எனவே உடனடியாக வண்டிக்கான தவணைத் தொகையைக் கட்ட வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஃபைனான்ஸ் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம்கொண்ட மதன்குமார் என்பவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்ட சந்தனக்குமார், இரவு குடிபோதையில் பழனிக்குமார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். போதையில், பழனிக்குமார் வீட்டின் முன்புற கண்ணாடி, ஜன்னல் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியிருக்கிறார். இதை தட்டிக்கேட்ட பழனிக்குமார், அவருடைய மனைவியைத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

இழப்பு
இழப்பு

இந்தச் சம்பவம் குறித்து நேற்று இரவே ஆலங்குளம் காவல் நிலையத்தில் பழனிக்குமார் புகார் அளித்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் பழனிக்குமார் நடத்திவரும் டூ வீலர் விற்பனை நிறுவனத்தில் நிறுத்தியிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக அவருக்குத் தகவல் வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது விற்பனை நிறுவனத்துக்கு வெளிப்புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 25 டூ வீலர்கள், நிறுவனத்தின் உள்பகுதியில் நிறுத்திவைத்திருந்த விலயுயர்ந்த பத்து டூ வீலர்கள் என 35 வாகனங்கள் மொத்தமாக தீயில் எரிந்து சேதமாகின. மேலும் அலுவலகத்தில் உள்ளேயிருந்த உபயோகப் பொருள்கள் மற்றும் டூ வீலர் ஆவணங்களும் மொத்தமாக தீயில் எரிந்து நாசமாகின. இதன் மொத்த மதிப்பு 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என பழனிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

டூவீலர்கள்
டூவீலர்கள்

இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் சந்தனக்குமார், அவருடைய நண்பர் மதன்குமார் ஆகிய இருவர்மீதும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்" என்றனர்.