Published:Updated:

கத்திக்குத்தில் முடிந்த குழாயடிச் சண்டை; போலீஸில் புகாரளித்ததால் வெறிச்செயல்!

கத்திக்குத்து
News
கத்திக்குத்து ( மாதிரிப் படம் )

நேற்று (16.03.23) மாலை சரண்ராஜ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, ஹரி விக்னேஷின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.

Published:Updated:

கத்திக்குத்தில் முடிந்த குழாயடிச் சண்டை; போலீஸில் புகாரளித்ததால் வெறிச்செயல்!

நேற்று (16.03.23) மாலை சரண்ராஜ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, ஹரி விக்னேஷின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.

கத்திக்குத்து
News
கத்திக்குத்து ( மாதிரிப் படம் )

சென்னை திருவான்மியூர், அண்ணாதெரு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஹரி விக்னேஷ் (26). இவரின் மனைவி பாக்கியலட்சுமி, பெரியம்மா லதா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுக்கு அருகில், சரண்ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இரு குடும்பங்களுக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இருவரும் வீட்டில் பேசிக் கொள்வதைக்கூட `நம்மைதான் திட்டுகின்றனர்' என எண்ணி இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டிருக்கிறது. 

ஹரி விக்னேஷ்
ஹரி விக்னேஷ்

இது குறித்து கடந்த 14-ம் தேதி திருவான்மியூர் காவல் நிலையத்தில் பாக்கியலட்சுமி புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்ற போலீஸார் முறையாக சரணிடம் விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (16.03.23) மாலை சரண்ராஜ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, ஹரி விக்னேஷின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில் குடல் சரிந்து ஹரி விக்னேஷ் மயங்கி விழுந்தார்.

இதனைத் தடுக்க முயன்ற அவரின் தாய் லதாவுக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 4 பேரும் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் கத்திக்குத்துப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் திருவான்மியூர் போலீஸார், தலைமறைவான கும்பலைத் தேடி வருகின்றனர்.