கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த தீக்ஷா அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருகிறார். தீக்ஷா வழக்கமாக தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வழக்கம் போல் வீடு திரும்பியுள்ளார். அப்போது தீக்ஷாவை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைந்து வைத்திருந்த கத்தியை கொண்டு தீக்ஷாவின் கை கால்கள் வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைக்குலைந்த போனவர் கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த மருத்துவமனைக்கு பின்புறம் நடந்துள்ளது. இதனைக்கண்ட மருத்துவமனை செவிலியர்கள் கூச்சலிட்டுள்ளனர், இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அங்கு விரைந்தனர். பொதுமக்களை கண்டதும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார். கீழே கிடந்த தீக்ஷாவை மீண்டும் கத்தியால் தாக்கினார். இதன் பின்னர் மக்களை நோக்கி வந்த அந்த இளைஞர் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டார். பின்னர் தீக்ஷா அருகில் சென்று விழுந்துவிட்டார். இதனை ஒருவர் வீடியோ முழுவதுமாக வீடியோ பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்ஷா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை விசாரணையில் தீக்ஷாவை தாக்கிய இளைஞர் சுசாந்த் என்பது அவர் நடன ஆசிரியர் என்பதும் தெரியவந்துள்ளது. காதல் விவகாரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். அந்த பெண்ணை 12 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

தீக்ஷா - சுஷாந்த் இருவரும் 6 வருடங்களாக பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததுள்ளார். சுஷாந்தின் நடன ஆசிரியர் என்பதால் அவரிடம் நடனம் பயின்று வந்துள்ளார். அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சுஷாந்தின் நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். தீக்ஷா எம்.பி.ஏ சேர்ந்த பிறகு தான் அவரிடம் பழுகுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் சுஷாந்த் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் அவரது தொந்தரவுகள் அதிகமாகவே இருந்துள்ளது. தீக்ஷா படிக்கும் கல்லூரிக்கு வந்து தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் சுஷாந்தை அழைத்து கண்டித்துள்ளனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியுள்ளார்.