நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்! | K. Nathamuni & Sons - A costume drama unfolds - Diwali Malar | தீபாவளி மலர்

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

கலை: ரேவதி, படங்கள் /பொன்.காசிராஜன்

குழந்தைகளின் ரசனை வித்தியாசமானது... புதுமையானது. அவர்களைப் புரிந்து கொள்ள முடிந்த காரணத்தால்தான் இத்தனை வருடங்களாக இந்த காஸ்ட்யூம் சென்டரை நடத்த முடிகிறது...'' சிரிக்கிறார் ரபீந்திரகுமார். ''மாறுவேடப் போட்டிக்காக அவர்கள் முயல் குட்டி, கரடி, மான், மயில் என்று உடைகள் கேட்பார்கள். 'மானுக்கு கொம்பு பெரிசா வேணும்... பச்சை நிறத்தில் முயல் டிரெஸ் இருக்கா?’ என்பது போன்று நாம் எதிர்பார்க்காத கேள்விகளை எல்லாம் வீசுவார்கள். குழந்தைகளது திருப்திக்கு உடைகளைத் தயார் செய்து கொடுத்ததும், அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம்தான் எங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரம்!'' என்கிறார். 

சென்னை கோடம்பாக்கம் லிபர்டி பாலத்துக்குக் கீழே இருக்கும் இவரது, 'கே.நாதமுனி அண்ட் சன்ஸ் நிறுவனம்’ நிறுவனத்தில் கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் என்று எந்த விசேஷ நாட்கள் வந்தாலும், முந்தைய தினங்களில் திருவிழா கூட்டம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick