வாண்டுகள் ‘பார்த்த’சாரதி!

ஆன்மிகம்: கே.எம்.பிரசன்னா

வேங்கடகிருஷ்ணனாக குடும்பத்துடன் இறைவன் அருளும் திருத்தலம். திருமுகத்தில் போரினால் ஏற்பட்ட அம்புகளின் தழும்புகளுடன் திகழும் உற்சவர் ஸ்ரீபார்த்தசாரதி. திருமங்கை மன்னன் மற்றும் பேயாழ்வார் பாடிய புண்ணிய திருத்தலம்... ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவரதர், ஸ்ரீராமன், ஸ்ரீரங்கநாதர் ஆகியோர் ஒருசேர அருளும் திருவிடம்... என்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சிறப்புகளுக் கெல்லாம் சிறப்பு சேர்க்கிறது, சித்திரையில் சிறுவர்கள் நிகழ்த்தும் வைபவம். 

சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாட்களும் வீதியுலா காண்பார் பார்த்தசாரதி. அவரை தரிசிக்க வீதியில் கூடும் அன்பர்கள், பெருமாளின் வாகனம் கடந்து சென்ற பிறகும் ஆவலுடன் காத்திருப்பார்கள்... ஏன் தெரியுமா? சற்று இடைவெளி விட்டு... பெருமாள் எந்த வாகனத்தில், எந்த அலங்காரத்தில் அன்று எழுந்தருள்கிறாரோ, அதே போன்ற அமைப்பிலான ஒரு சிறிய வாகனத்தில், அதே அலங்காரத் திருக்கோலத்துடன், சிறுவர்கள் புடைசூழ 'சின்னப் பெருமாள்’  பின் தொடர்ந்து வருவார். இவருக்கு அலங்காரம் செய்வது முதல் வீதியுலா அழைத்து வருவது வரை எல்லாவற்றையுமே செய்பவர்கள் சிறு வர்கள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick