கதை சொல்லிகளின் பேரன் நான்!

பிரபு என்கிற பிரபாகரன்!சிவராஜ்

நாளைக்கு மறுநாள் சுந்தரபாண்டியன் ஷூட்டிங் ஆரம்பம். முதல் படத்தை இயக்கப்போகிற பதற்றம் மனசு முழுக்க. ஏற்கெனவே இரண்டு படங்களை ஆரம்பிச்சு கடைசி நேரத்துல கையவிட்டுப் போயிடுச்சு. அதையும் கடந்து ஒரு வாய்ப்பு கைகூடி நிற்குது. ரெண்டு தடவை நூலிழையில பதக்கத்தைத் தவறவிட்டவன் மூணாவது தடவையா களத்துல நிற்கிறேன். அந்த நேரம்னு பார்த்து திடீர்னு பெப்ஸி ஸ்டிரைக். உலகமே ஒரு நிமிஷத்துல சுக்குச் சுக்கா சிதறிப்போற மாதிரி இருந்துச்சு. 'சுந்தரபாண்டியன் டிராப்’னு என் காதுபடவே பேச ஆரம்பிச்சுட்டாங்க. யார்கிட்டயும் ஆறுதலுக்காகக்கூடப் பேசத் தோணலை.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick