வெற்றி தரும் கீதை வழி! | Life lessons from Bhagavad Gita - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெற்றி தரும் கீதை வழி!

ஆதித்யா ரஜினி

மெரிக்காவைச் சேர்ந்த 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களைப் பட்டியல் போட்டிருக்கிறது. அதில், 18-வதாக வருபவர் வேணுகோபால் தூத். வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் சேர்மன். இந்தியத் தொழிற்துறைக்குப் பெருமை சேர்த்திருக்கும் முகம் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கால் புகழப்பட்டவர்.

வீட்டுப் பொருட்களான டி.வி., பிரிட்ஜ், ஏர் கண்டிஷனர், வாஷிங்மெஷின் தொடங்கி மொபைல் போன், இன்டர்நெட், பெட் ரோலியம், இயற்கை வாயு, காற்றாலைகள் என்று வீடியோகான் குழுமத்தின் தயாரிப்புகள் நீள்கிறது.18 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் இந்தக் குழுமத்தின் ஆண்டு வருமானம் 48 ஆயிரம் கோடி ரூபாய். தொழில் மட்டுமின்றி மருத்துவமனை, கல்விக்கூடம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சமுதாயப்பணி நடக்கிறது. மற்ற தொழில் அதிபர்களிடம் இல்லாத ஒரு தனிச்சிறப்பு, வேணு கோபால் தூத்திடம் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick