உள்ளம் கொள்ளை போகுதே!

க்ளிக் - புவன் - நிதின்

ந்தக் காட்சிகள் அனைத்தையும் க்ளிக்கியவர்... வி.எஸ்.ஆர்.மூர்த்தி. இவர் இந்திய கடலோர காவல் படையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (அந்தமான் பிரிவு) எனும் உயர்பதவியில் இருக்கிறார். துப்பாக்கி சுடும் இவருடைய கைகள்... மனதையும் கண்களையும் கொள்ளை கொள்ளும் படங்களையும் சுட்டுத்தள்ளத் தவறுவதில்லை. புகைப்படக் கலை மீது அதீத ஆர்வம் கொண்ட இவரிடம் பேச்சுக்கொடுத்தால்... அந்தக் கலையின் அடி முதல் நுனி வரை அலசி ஆராய்ந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

'இந்திய அரசின் உயர் விருந்தினர்' என்கிற வகையில் இவர் பலநாடுகளுக்கும் மேற்கொண்ட பயணங்கள் மற்றும் உள்நாட்டுப் பயணங்களின்போது பல ஆயிரம் படங்களை எடுத்துக் குவித்திருக்கிறார். அவற்றிலிருந்து சில படங்கள் இங்கே உங்களுக்காக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick