மாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்!

பொக்கிஷம் - ஓவியம்: கோபுலு

ந்தக் காலத்தில் தீபாவளி என் றால் புது உடை, பட்டாசுக்கு அடுத்ததாக நினைவுக்கு வருவது ஆனந்த விகடன் தீபாவளி மலர்தான். பலரது வீடுகளில், ஆனந்த விகடன் தீபாவளி மலரை வாங்க வில்லையென்றால் அந்த ஆண்டு பண்டிகை சோபிக்காது. ஏதோ குறையாகவே இருக்கும். அதனாலேயே கடைகளில் முன்கூட்டிப் பதிவு செய்து விகடன் தீபாவளி மலரை வாங்கி விடுவார்கள்.

1937-ம் ஆண்டு நான் கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்தேன். அப் போது, விகடன் தீபாவளி மலர் வாங்கி ஆர்வத்தோடு பார்ப்பேன். அந்தக் காலத்து விலைவாசியில் விகடன் தீபாவளி மலர் விலை இரண்டு ரூபாய்தான். பிறகு, ஐந்து ரூபாய் ஆனது. சின்ன வயதில் இருந்தே, ஓவியங்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். விகடன் தீபாவளி மலர்களில் வெளியாகியிருக்கும் ஓவியர் மாலியின் படங்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன். அதைப்போலவே வரைய முயற்சி செய்வேன். அப்போதே, அவரை என் மானசீக குருவாக வரித்துக்கொண்டு விட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick