கதை சொல்லும் படங்கள்!

க்ளிக் - என்.விவேக்

லட்டூர் ரத்தினம் சங்கர்.... புகைப்படக் காதலன்.  கல்பாக்கம் அருகில் உள்ள இலட்டூரைச் சேர்ந்த இவர், கடந்த 18 வருடங்களாக பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கள்ளச்சாராய ஒழிப்பு, மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, வறுமை ஒழிப்பு, சுற்று சூழலுக்கு ஆதரவு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு என்று சமூகத்தின் கூக்குரலாகவும் ஒலிக்கின்றன... இவரது புகைப்படங்கள்.  

முதன்முதலாக தினமலர் நாளிதழில் போட்டோகிராபராக பணியில் இணைந்து அங்கே, தலைமை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய கே.விஸ்​வநாதனிடம் முறையே புகைப்பட நுணுக்கங்களைக் கற்றுக்​கொண்​​டதை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நன்றி மறவாமல் பகிர்ந்து​கொள்கிறார். இப்போது, 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் தலைமைப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டுக்​கான, 'மீடியா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’வால் ஒருங்கிணைக்கப்​படும் தேசிய அளவிலான நியூஸ் போட்டோஃகிராபி விருதுக்கு, இவர் எடுத்த புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick