காதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...

லவ்எஸ்.கே.முருகன்

ந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை’ என்ற எண்ணத்தில்தான் அத்தனை பேரும் மெய்மறந்து காதலிக்கிறார்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தில்லாக எதிர்த்து நின்று போராடி, திருமணம் செய்து கொள்கிறார்கள். அத்தனை தீவிரமாக இருந்த காதலர்கள்தான், சில வருடங்களில் நீதிமன்றப் படி ஏறி விவாகரத்து கேட்டு அடம் பிடிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்கக்கூட பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்... சந்தேகப் படுகிறார்கள்... சில நேரங்களில் கொலையும் செய்கிறார்கள்.

திருமணத்தில் முடிந்த காதலில்தான் சிக்கல் என்றால் நிறைவேறாத காதலும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுடனே இருக்கிறது. 'நான் உயிரையே வைத்திருந்தேன். என் காதலைப் புரிந்துகொள்ளவே இல்லை. என்னை ஏமாற்றி விட்டார்’ என்று பரஸ்பரம் புகார் சொல்லித்தான் பிரிகிறார்கள். தோல்வி அடைந்த காதலை கெட்ட கனவாக எண்ணி மறக்கத்தான் துடிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick