சுதந்திர வடு!

அந்தமான் சரித்திரம்சு.குமரேசன்

ந்தமானைப் பாருங்கள் அழகு’ என்ற சினிமா பாடல் அந்தத் தீவின் அழகைக் கண்முன்னே கொண்டுவரும். ஆனால், அங்கே அழகு மட்டுமா இருக்கிறது?

அடிவயிற்றில் அமிலம் சுரக்கவைக்கும் கொடூரச் சிறை இங்கேதான் இருக்கிறது. ஆம், அந்தமானின் சிறையை 'பூலோகத்தின் கடந்த கால நரகம்’ என்றுதான் சொல்கிறார்கள். இந்திய‌ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளை நசுக்குவதற்காகவே கட்டப்பட்ட சிறப்பு நரகம்! உலகில் வேறு எந்த மூலையிலும் இப்படியொரு நரகம் திட்டமிட்டுக் கட்டப்பட்டது இல்லை என்பதே செல்லுலார் சுவர்கள் சொல்லும் சேதி. அதனால்தான் இந்தச் சிறையை இந்தியில், 'காலா பானி’ (கறுப்புநீர்) என்கிறார்கள். அதா வது கறுப்பு என்பது துக்கத்தின் நிறம். துயரத்தால் சூழப்பட்ட தீவு அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்