செல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா?

நகைச்சுவை - பாக்கியம் ராமசாமி, ஓவியம் - ஸ்யாம்

சிட்டுக் குருவிக்கு அடுத்தபடியாக சிட்டியில் பஞ்சம் ஒன்று உண்டு என்றால், அது வீட்டு வேலைகளைச் செய்து தரும் பணிவிடைப் பெண்களுக்குத்தான்.

ஒரு லேடீஸ் கிளப்பில் 'சிறந்த ஹவுஸ் ஒய்ஃப்’ என்று ஒருவரைத் தேர்வு செய்து பரிசாக ஒரு வெள்ளிக் கோப்பை தந்தார்கள். அவர் வீட்டில் ஒரு பணிப்பெண் தொடர்ச்சியாக ஐந்து வருட காலத்துக்கு  ​வே​லை ​செய்து வந்தாள். அந்தக் கோப்பையில், 'பணியாள் பேணும் பண்புத் திலகம்’ என்று வாசகம் பொறித்துக் கொடுத்தார்கள். அந்த அம்மா​ளை உடனே ஒரு பேட்டி காணவேண்டுமென்ற ஆவல். பரிசு ​பெற்றவரின் தோற்றம் பார்வைக்குச் சாதாரண, சராசரிக் குடும்பத் தலைவியைப் போன்றுதான் இருந்தது. பேட்டிக்குப் போனவர் கொஞ்சம் வாய்த் துடுக்கு நிருபர். அந்த வீட்டு எஜமானியோ தன் பரந்த மனசால் நிருபரை ஏகத்துக்கும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick