அஜக்தா...ஜினக்தா!

கலை - மானா பாஸ்கரன்

பொம்மைதான் மனிதனின் முதல் சினேகிதன். அழும் குழந்தையைச் சிரிப்பின் திசைக்கு மாற்றும் பொம்மைகளைத்தான் மனித நாகரிகத்தின் முதல் கலைவடிவம் என்கிறது மானுடவியல். இத்தகைய பொம்மைகளை வைத்து கலாபூர்வமான நிகழ்ச்சிகள் பல நூற்றாண்டாகவே நடந்து வருகின்றன. நாடக வடிவத்துக்கும் பொம்மலாட்டத்துக்கும் சின்ன வித் தியாசம்தான். இங்கே மனிதன் பேசி நடிப்பான். அங்கே பொம்மைகள் பேசி நடிக்கும்.

மக்கள் கலையான இந்தப் பொம்மலாட்டக் கலைக்குப் புத்துயிர் கொடுக்கும் பணியில் தன்னை தீவிரமாக அர்ப்பணித்து இருக்கிறார் மு.கலைவாணன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மீது உள்ள பெருவிருப்பத்தால், கலைவாணன் என்று பெயர் பெற்றவர். இவருடைய தந்தை முத்துக்கூத்தன் 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’ என்ற அற்புதமான பாடலை எழுதிய பாடலாசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்