எல்லா நாளும் தீபாவளி! | Diwali Celebrations - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

எல்லா நாளும் தீபாவளி!

பொக்கிஷம் - ஓவியர் வாணி, படம் - இரா.ஸ்ரீதர்

நாயகர் சதுர்த்தியும் கொழுக்கட்டையும் போல, தீபாவளியும் பட்டாசும் போலத் தான் தீபாவளிக் கொண்டாட்டமும் ஆனந்த விகடன் தீபாவளி மலர்களும்! அந்தக் காலத்தில் பாஸ்கர தொண்டைமான், லா.ச.ராமாமிர்தம், கி.வா.ஜகந்நாதன், ரா.பி.சேதுப் பிள்ளை, லக்ஷ்மி போன்று பெரிய பெரிய எழுத்தா ளர்கள் எல்லாம் விகடன் தீபாவளி மலர்களில் தங்கள் கதைகளும் கட்டுரைகளும் வெளியாவதை மிகவும் பெருமையாகக் கருதினார்கள். ஓவியர்கள் மாலி, ராஜு, சில்பி, கோபுலு போன்றவர்களின் படங்களும் விகடன் தீபாவளி மலர்களை அலங்கரிக்கும். 1952-ம் ஆண்டு, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் மூல விக்கிரகத்தைப் படம் வரைவதற்காக திருவாரூர் வந்தார் ஓவியர் சில்பி. உடனே போய் அவரைப் பார்த்தேன். அவர் அப்போது விகடனில் ஸ்டாஃபாக வேலை செய்துகொண்டிருந்தார். அவரிடம், 'உங்களை மாதிரியே எனக்கும் விகடன் தீபாவளி மலரில் படம் வரையணும்னு ஆசை’ என்று என் ஏக்கத்தைத் தெரிவித்தேன். எனக்கு அப்போது 26 வயது இருக்கும். சில்பி மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, 'கடவுளின் அருள் இருந்தால் நிச்சயமாக முடியும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick