மலையேறு...மலையேறு... | Trekking - Virudhunagar - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

மலையேறு...மலையேறு...

பயிற்சி் - எம்.கார்த்தி , படங்கள் - முத்துராஜ்

யானை, வானவில், மலை போன்றவற்றைப் பார்த்தாலே பலருக்கும் ஜிலீரென்று இருக்கும். யானை, வானவில்லை பார்த்து ரசிக்க மட்டும்தான் முடியும். ஆனால், மலையின் மடி மீது விளையாடவும், உச்சியில் நின்று கொண்டாடவும் முடியும் என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் முருகேசன். பிசியோதெரபி டாக்டராக இருந்தாலும் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் அத்தனை ஆர்வமாக இருக்கிறார். சென்னை, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே செயல்படும் டிரெக்கிங் கிளப்பை, விருதுநகரில் நடத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.

டிரெக்கிங் என்பதை பலரும் சாகசப் பயணமாகவும் சாதனைப் பயணமாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், நான் இதை உடல் மற்றும் மனநலன் காக்கும் பயிற்சியாகத்தான் பார்க்கிறேன். ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து மாதம்தோறும் இரண்டு நாட்கள் கொடைக்கானல், மூணாறு போன்ற பகுதிகளுக்குப் போய் வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick