மாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15

டாக்டர் ராஜி ராவ்

ப்பிரிக்க கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான காம்பியா (ஜாம்பியா இல்லீங்கய்யா) சுற்றுலா பிரியர்களின் சொர்க்கம். கொஞ்சும் இயற்கை, மண் மணம் மாறாத மக்கள், இதமான சீதோஷ்ணம், இடைஞ்சல் ஏதும் வராதபடி பாதுகாப்பு போன்றவைதான் உலகம் எங்குமிருந்து சுற்றுலா பயணிகளை இங்கே இழுத்து வருகின்றன.

காம்பியா என்ற நதி பாயும் தேசம் என்பதால், இந்த நாட்டுக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது. மேற்கே அட்லாண்டிக் சமுத்திரமும் மற்ற திசைகளில் செனகல் (senegal) நாடும் அமைந்துள்ளது. மக்களின் புராதன கலாசாரம், சிரித்த முகம், எளிமையான வாழ்க்கை முறை எல்லாமே இந்தியத் தன்மைக்கு நெருக்கமானவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick