நவீன நாடகம்

சிறுகதை - க.சீ.சிவகுமார், படங்கள் - ஆ.வின்சென்ட்பால்

னது நாடகம் ஒன்றுக்கான அழைப்பிதழை நண்பன் அனுப்பியிருந்தான். தமிழ் நாட்டின் கடைக்கோடி ஊர் ஒன்றில் மலைச் சரிவில் காட்டுவாசிச் சமூகத்தினரிடையே அந்த நாடகம் நிகழ்த்தப்படப்போவதாய் அழைப் பிதழ் அறிவித்தது. பாரம்பரியத்தை மீட்டெடுக்கவேண்டும் என்பதில் நண்பனுக்கு மாளாத ஆர்வம் உண்டு. ஆகவே, நாடகமும் முதலில் இப்படியான இடங்களில் நடத்தப்படுவதை அவன் ஒரு அரசியற் செயல்பாடாக வைத்திருந்தான். வெளிமாநிலத் தலைநகரில் அது என் கைக்குக் கிடைத்தபோது சிவசந்திர சேகர னும் கூட இருந்தார். அழைப்பிதழின் வாக்கியங்களை என்னால் வாசிக்கக் கேட்டு அழைப்பிதழின் வடிவத்தையும் கண்ணுற்ற சந்திரசேகரன் ''நானும் உன்னுடன் வருகிறேன்'' என்று விருப்பத்தை வெளியிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick