நிசப்த சங்கீதம்

சிறுகதை - தமிழருவி மணியன், ஓவியம் - ஸ்யாம்

ண்மையையும், நேர்மையையும் காலம் முழுவதும் வழுவாமல் தழுவி வாழ்ந்த காந்தியவாதி கணேசமூர்த்தி கண்மூடி விட்டார் என்ற செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போனார் சிவராமகிருஷ்ணன். தன்னலத்தின் நிழல்படாமல் மண்ணலம் காப்பதற்காகவே தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கால நடையில் அருகி வருவது அவருக்குக் கவலையளித்தது.

கல்லுப்பட்டிக் காந்தி ஆசிரமத்தில் ஐம்பதாண்டுகள் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தேய்ந்த உன்னதமான தோழர் கணேசமூர்த்தி, தான் பிறந்த கல்லக்குடி மண்ணிலேயே கடைசியில் காலமாகி விட்டார். தன்னுடைய அழகிய அந்தரங்கமான ரகசியங்களை அறிந்து வைத்திருந்த ஒரே உயிர்த்தோழரையும் சிவராமகிருஷ்ணன் இன்று இழந்து விட்டார். காந்தியப் பாதையில் இவரை இழுத்து வந்து கல்லுப்பட்டி ஆசிரம வாழ்க்கையில் இணைத்து வைத்த கணேசமூர்த்தியோடு சேர்ந்து பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் ஒன்றுவிடாமல் நெஞ்சில் நிழலாடின. கண்களில் ஈரம் கசிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick