மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

கண்காட்சி ஜி.எஸ்.எஸ்.

தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களில் ஒன்று, காஞ்சனபுரி.  அங்குள்ள 'தாய் பாம்புக் காட்சி’ மிகப் பிரசித்தமானது. அந்தக் காட்சி பலவிதங்களில் மறக்கமுடியாததாக இருக்கும். அதுவும் முக்கியமாக, அந்த கிளைமாக்ஸ் காட்சி!

பாங்காக்கில் இருந்து மேற்குப்புறமாக உள்ளது காஞ்சனபுரி. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மினி வேன்களும் பேருந்துகளும் உள்ளன. காரில் சென்றால், ஒன்றரை மணி நேரத்தில் காஞ்சனபுரியை அடைந்துவிடலாம்.

சரி, பாம்புக் காட்சிக்கு வருவோம். 'பாம்பென்றால் படையே நடுங்கும்’ என்பார்கள். ஆனால், இங்கே பாம்புக் காட்சி நடைபெறும் இடமோ எந்தப் பரபரப்புமின்றி அமைதியாகக் காட்சி அளிக்கிறது. வாசலில், நீரின் நடுவில்  ஏழு தலை நாகச் சிலை காணப்படுகிறது. ஸ்ரீகண்ணனால் கொட்டம் அடக்கப்பட்ட காளிங்கனை இது நினைவுபடுத்துகிறது. சுவரின் மீது புடைவை பார்டர் போல பல நாட்டுக் கொடிகள். வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுக் கொடியை அடையாளம் கண்டு, சந்தோஷிக்கிறார்கள்.

நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 250 தாய் பத் (சுமார் 500 ரூபாய்). தாய் எழுத்துக்களில் எல்லா அறிவிப்புகளும் பாம்புகள் போலவே நெளிந்திருந்தன. காட்சி அரங்கத்துக்குச் செல்வதற்கு முன், பலவித பாம்புகளை கண்ணாடிக் கூண்டுகளில் காணமுடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்