மீடியா டார்லிங்! | Subhash Chandra Agarwal - Diwali Malar | தீபாவளி மலர்

மீடியா டார்லிங்!

கட்டுரை: சரோஜ் கண்பத், படம்: முகேஷ் அகர்வால்

சுபாஷ் சந்திர அகர்வால்! கடந்த 45 வருடங்களாக தனி மனித சுதந்திரத் துக்கும் மனித உரிமைக்கும் பொதுநலனுக்கும் குரல் கொடுத்து வருபவர். 17 வயதில் தொடங்கிய இந்தப் பழக்கம், 63 வயதிலும் தொடர்கிறது.

பொதுநலன் கருதி, மக்கள் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவதில் புகழ்பெற்ற சுபாஷ் அகர்வாலின் கடிதங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன. இதற்காக இவரது பெயர் கின்னஸ் ரெக்கார்டில் பதிவாகியிருக்கிறது. இவரது மனைவி மது அகர்வாலுக்கும் இதே போராட்ட குணம் தொற்றிக்கொள்ள, குறிப்பிட்ட காலத்துக்குள் அதிக அளவு பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதி ரெக்கார்ட் பிரேக் செய்து, தனது பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதித்துவிட்டார் மது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick