செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை | Suba short story - Diwali Malar | தீபாவளி மலர்

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை

சுபா

கோவை வரை விமானப் பயணம்; அங்கிருந்து திருப்பூர், ஈரோடு, பெருந்துறைக்கு காரில் செல்வது என முடிவாகியிருந்தது. கோவையில் நான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் டிராவல்ஸ் கார் வேண்டும் என்று கேட்டதும், அவர்கள் சிபாரிசு செய்தது கதிரவன்.

 காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து, நெற்றியில் திருநீறுடன் அவன் ரிசப்ஷனில் காத்திருந்தான். முப்பதுக்குள் வயது. நல்ல உயரம். தூய வெள்ளை நிறச் சீருடை. செருப்புகள்கூட வெள்ளை நிறம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick