அபூர்வ சகோதரிகள்! | Twin Sisters | தீபாவளி மலர்

அபூர்வ சகோதரிகள்!

ரட்டையர்களைப் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருப்பது சாதாரணம்தான். ஆனால், இந்த இரட்டையர்கள் கொஞ்சம் அசாதாரணமானவர்கள்! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சேர்ந்த 46 வயது எம்மி, பெக்கி கிளாஸ் (Amy and Becky Glass) என்னும் இந்த இரட்டைச் சகோதரிகள் ஒரே செல்போனைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக்கிலும் ஒரே அக்கவுன்ட்தான். ஒரே மாதிரியான உணவை, ஒரே அளவில்தான் சாப்பிடுகிறார்கள். ஏன் என்றால், ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு குண்டாகி, வித்தியாசமாகத் தெரியக்கூடாதே என்கிற அக்கறைதான். இருவரும் சேர்ந்து ஒரே பிசினஸைத்தான் கவனித்துக்கொள்கிறார்கள். அவ்வளவு ஏன்... இருவருக்கும் ஒரே பாய் ஃபிரெண்டுதான்! ''ஒரு ஆத்மா இரு உடல்களில் இருப்பது போலத்தான் நாங்கள் உணர்கிறோம்’ என்கிறார்கள் இந்த அபூர்வ சகோதரிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick