வெயிட்டான சாம்பியன்!

பூஜை இல்லாத கோயில், ராஜா இல்லாத கோட்டை, நீரில்லா ஆறு... என வேலூரைப் பற்றி பொதுவாகச் சொல்வார்கள். இந்த எதிர்மறை வார்த்தைகளை எல்லாம் ஒரே நாளில் மாற்றி ஒட்டுமொத்த உலகத்தை வேலூர் பக்கம் திருப்பியிருக்கிறார் சதீஷ் சிவலிங்கம். சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 77 கிலோ பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இதை சாதித்திருக்கிறார் சதீஷ்.

22 வயது இளம் புயல். அதோடு, 77 கிலோ பிரிவில் மொத்தமாக 328 கிலோ தூக்கி காமன்வெல்த் போட்டி சாதனையும் புரிந்திருக்கிறார் (முந்தைய சாதனை 310 கிலோ). வேலூர் சத்துவாச்சாரியில் வசிக்கும் இவர், ரயில்வேயில் பணியாற்றுகிறார். எளிமையான குடும்பத்தில் பிறந்த சதீஷின் தந்தை, ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர். இப்போது ''எனது கவனம் முழுவதும் அடுத்தடுத்து போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்வதுதான்'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்