ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்! | Sadhguru Jaggi Vasudev interview | தீபாவளி மலர்

ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்!

வி.ராம்ஜி

''மக்கள் ஒன்றாகக் கூடுவது, இல்லங்களை அலங்கரிப்பது, ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு தெருவையும் வண்ண மயமாக மாற்றுவது, இனிப்புகளும் பரிசுகளும் பரிமாறிக்கொள்வது என நம் கலாசாரத்தில் திருவிழாக்கள் அங்கம் வகித்தபடியே இருக் கின்றன, அமர்க்களப்பட்டுக்கொண்டே இருக்கின்றன'' என்று வெடிச்சிரிப்புடன் பேசுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

'பண்டிகை’ என்றதும் மெல்லிய உற்சாகம் பூக்கிறது உதட்டில். 'விழாக்கள் குறித்துச் சொல்லுங்கள்’ என்றதும் கண்கள் மூடி, சிறிது நேரம் பழைய நினைவலைகளில் நீந்துகிறார். 'தீபாவளி, உங்கள் பால்யம் என்றெல்லாம் பேசலாம்’ என்றதும், சட்டென்று கண்களைத் திறந்து, குழந்தைபோல் குதூகலிக்கிறார். முகம் முழுக்க மத்தாப்புச் சிரிப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick