கிருஷ்ணாவின் சங்கீதோபதேசம்! | Krishna's Sangeetham | தீபாவளி மலர்

கிருஷ்ணாவின் சங்கீதோபதேசம்!

கட்டுரை: வீயெஸ்வி
படங்கள்: கே.ராஜசேகரன்

வ்வப்போது மேடையேறி இரண்டு மணி நேரம் பாடிவிட்டு, பின்னர் அவர்பாட்டுக்குத் தன் சொந்த வேலையைப் பார்க்கப் போய்விடக்கூடிய ரகம் இல்லை வித்வான் டி.எம்.கிருஷ்ணா. சமூக அக்கறையோடு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் பன்முகக் கலைஞர் இவர். ஆங்கில நாளேட்டில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சங்கீதம் அல்லாத இதர பிரச்னைகள் பற்றிக் கட்டுரை எழுதுகிறார். பள்ளிக் குழந்தைகளிடம் இசையைக் கொண்டுசெல்ல வருடம் ஒருமுறை விழா எடுக்கிறார். பாமரர்களிடமும் கர்னாடக இசை சென்றடைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார். பாலஸ்தீனிய பிரச்னை குறித்து சென்னையில் விவாதம் நடந்தபோது, அதிலும் பங்கேற்றுப் பேசினார், இந்த 38 வயது இளைஞர். தொழில்முறையில் கச்சேரி வடிவ சம்பிரதாயங்களை உடைத்தெறிந்துவிட்டு, சர்ச்சையின் நாயகனாகவும் வலம் வருபவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick