பட்டும் படாமலும்!

பராமரிப்புவே.கிருஷ்ணவேணி, படங்கள்: கே.கார்த்திகேயன்

துணி துவைப்பது ஒரு கலை! இப்படிச் சொன்னால் 'அட போங்கப்பா... உங்களுக்கு வேற வேலை இல்லை’ என்று சிலர் பரிகசிக்கவும் கூடும். உண்மையில், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கும் ஓர் உடையை, சிறு கறை தூக்கிப் போட வைத்துவிடும்; ஒரே துவையில் சாயம்போய் 'ஈ...’யெனப் பல்லிளிக்கும் புத்தாடை நம்மைக் கலங்கடித்துவிடும். துணிகளின் தன்மையும் வண்ணமும் பாழாகாமல் டிரைகிளீன் செய்யும் தொழிலை விரிவாகச் செய்தால், லாபம் சம்பாதிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறது 'லாண்டரி புராஜெக்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம். பல ஸ்டார் ஹோட்டல்களுக்கு இந்த நிறுவனம் டிரைகிளீனிங் செய்து தருகிறது. இதன் நிறுவனர் ஆர்.பாலசந்தர் துணிகளின் பராமரிப்பு பற்றிப் பேசுகிறார்.

''ஒரு நாளைக்கு 12,000 பீஸ் துணிகளை சலவை செய்கிறோம். முதல் வேலை, துணிகளை வகை பிரிப்பது; சலவைக்கு வரும் துணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். காட்டன், எம்ப்ராய்டரி ஒர்க், சில்க்... இப்படி பல ரகங்களில் இருக்கும். எல்லாத் துணிகளையும் ஒன்றாக மெஷினில் போட்டு சலவை செய்ய முடியாது. மெஷின் வாஷ், ஹேண்ட் வாஷ், கறை நீக்குதல் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக, அதன் தன்மைக்கு ஏற்ப வாஷ் செய்ய வேண்டியிருக்கும். தனித்தனி டிடர்ஜென்ட் பயன்படுத்த வேண்டும். இந்திய தட்வெட்ப நிலையில் சட்டை காலரில் அழுக்கு அதிகமாகப் படியும். அதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் அழுக்கை நீக்கும் மெஷினில் ஸ்கிரப் செய்து நீக்குவோம்.  பிறகு டிரைகிளீன் செய்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick