அன்பார்ந்த வாசகர்களே..! | Editor page - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

அன்பார்ந்த வாசகர்களே..!

ங்கள் உற்சாகத்தில் பங்கெடுக்கவும் பங்களிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் 'தீபாவளி மலர்’ மூலம் உங்கள் இல்லங்களுக்குள் நுழைந்து மணம் பரப்பி வருகிறான் விகடன். இதோ, இந்த ஆண்டும் கலை, இலக்கிய வாசனைகளோடு விகடன் தீபாவளி மலர் தயார். சிறப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா, சுற்றுலா, ஆன்மிகம் என பல்சுவை விருந்தாக இது பரிமாறப்பட்டிருப்பதை, புரட்டும்போதே உங்களால் உணர முடியும்.

இறையருள் ஓவியர் சில்பி வரைந்த அற்புதமான ஏழு ஓவியங்கள் இந்த இதழில் உங்கள் மனதை நெகிழ்த்தும். அதேபோல், 108 வைணவ திருத்தலங்களில் 'அஞ்சுவை அமிர்தம்’ என்று வைணவ அடியார்கள் போற்றும் முக்கியமான ஐந்து தலங்கள் உங்களை பக்தியில் ஆழ்த்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick