எதிரி எம்.பி-க்கள் சந்திக்கும்போது...

ஆ.பழனியப்பன் அரசியல்

துரையில் உள்ள பூங்கா ஒன்றில், சில மாதங்களுக்கு முன்னர் காலை நடைப்பயிற்சியில் இருந்தார், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின். அதேசமயத்தில், அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜுவும் அங்கு நடைப்பயிற்சியில் இருந்தார். இருவரும் நேருக்குநேர் எதிர்ப்படவே, அமைச்சருக்கு வணக்கம் சொன்னார் ஸ்டாலின். பதிலுக்கு அமைச்சரும் வணக்கம் சொன்னார். அந்தச் செய்தி பரபரக்க, அமைச்சர் தரப்பு பதறிப்போனது. 'ஸ்டாலினைப் பார்த்துப் புன்னகைக்கவே இல்லை... வணக்கம் சொல்லவே இல்லை’ என அலறியடித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டார் ராஜு. மாற்றுக் கட்சியினரைக் கண்டால், புன்னகைப்பதும் மரியாதை செலுத்துவதும் தமிழ்நாட்டு அரசியல் அகராதியில் மாபெரும் குற்றங்களாக மாறிவிட்டன.

ஆனால், டெல்லி இதற்கு நேர்மாறானது... குறிப்பாக, நாடாளுமன்றத்தில். அங்கு நிலவும் அரசியல் நாகரிகம் போற்றத்தக்கது. எதிரும் புதிருமான இரு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவரை ஒருவர் கைப்பிடித்து நலம் விசாரிப்பதும், பேசிச் சிரிப்பதும் சகஜமான காட்சிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick