“டைம் ட்ராவல் சாத்தியம் ஆகலாம்!”

விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாபேட்டிகார்க்கிபவா, படங்கள்: தி.விஜய்

தீபாவளிக்கு நாம் விடும் ராக்கெட், சில அடிகள் அதிக உயரம் பறந்தாலே நமக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். விண்ணைத் தாண்டி விட்டதாக மகிழ்ந்து குதூகலிப்போம். நிஜமாகவே ராக்கெட் விண்ணில் பறந்து, அதில் நாமும் பயணம் செய்தால்..? அதை அனுபவித்து உணர்ந்தவர் ராகேஷ் ஷர்மா. இந்தியாவில் இருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். ராகேஷ் ஷர்மா இப்போது தன்னுடைய ஓய்வுகால வாழ்க்கையில், ஊட்டி அருகே குன்னூரில் வசிக்கிறார். விண்வெளியில் பறந்து மகத்தான சாதனை புரிந்தவர், நம் அருகிலேயே இருக்கும்போது விடலாமா?

''1965-ம் ஆண்டில் நான் குன்னூருக்கு வந்திருக்கிறேன். அப்போதே இந்த ஊரின் மீது எனக்குக் காதல். பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை இங்கேதான் கழிப்பது என அன்றே முடிவு எடுத்துவிட்டேன். கடவுள் நான் விரும்பியதைக் கொடுத்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. குன்னூர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick