கடலுக்கு அடியில் காதல் க்ளிக்ஸ்!

ஷாலினிகலை

திருமணம் நிச்சயம் ஆனதும் மண்டபம் பிடிக்கிறோமோ இல்லையோ, பலரும் முதலில் ஒப்பந்தம்செய்வது போட்டோகிராபரையும் வீடியோகிராபரையும்தான். பல வருடங்கள் கடந்தும், இனிய நினைவுகளைத் தக்கவைத்துக்கொள்ளும் பொக்கிஷம், புகைப்படங்களே! திருமணம், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள், சுற்றுலா என அத்தனை மகிழ்ச்சியான தருணங்களையும் அவரவருக்குப் பிடித்த மாதிரி, வசதிக்கு ஏற்ப படம் எடுத்துக்கொள்கிறோம். இன்றைக்கு நாமே செல்ஃபி, குரூஃபி எனக் கலக்கலாக எடுத்துத்தள்ளுகிறோம் என்றாலும், சில அற்புதமான தருணங்களை கைதேர்ந்த கலைஞர்களால்தான் மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற முடியும். 

வெளிநாடுகளில் திருமணங்களைப் புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், இதில் பல வித்தியாசங்களைப் புகுத்தத் தொடங்கிவிட்டார்கள். 'கிரேன் போட்டோகிராபி’, ஹெலிகேம் எனப்படும் குட்டி ஹெலிகாப்டரை வைத்து எடுக்கப்படும் 'ஏரியல் போட்டோகிராபி’ என வளர்ந்த இந்தத் தொழில்நுட்பம் இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. அது, தண்ணீருக்கு அடியில் புகைப்படங்கள் எடுக்கும் 'அண்டர்வாட்டர் போட்டோகிராபி’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick