சின்ன வடிவங்களின் கடவுள்!

கலைஇ.ராஜ விபீஷிகா

ஸ்லிங்கச்சு, ஒரு லண்டன் ஆர்டிஸ்ட் (1979). போட்டோகிராஃபரான இவர் 2006-ம் ஆண்டு முதல் தனது ஸ்ட்ரீட் ஆர்ட்டைத் தொடங்கி இருக்கிறார். ஆம்ஸ்டர்டாம், நார்வே, லண்டன், நியூயார்க் என்று பல்வேறு பகுதிகளில் இவரது 3டி ஸ்ட்ரீட் ஆர்ட் இருக்கும். இவரது படைப்பு ஒவ்வொன்றும் நமது அன்றாட வாழ்வைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. ஆனால், உங்களால்தான் பார்க்க முடியாது! ஆம். இவரது ஆர்ட் பீஸ்கள் எல்லாம் ஒரு செ.மீ.தான். சின்ன வயதில் இவரது அப்பா 'ட்ரெய்ன் செட்' வாங்கிக் கொடுக்க, இவருக்கு ட்ரெய்னை விட அந்த செட்டில் இருக்கும் குட்டிக்குட்டி மனிதர்களைப் பிடித்துவிட்டது. லண்டனில் இருக்கும் ஒரு ட்ரெய்ன் செட் கம்பெனியில் இந்த குட்டி மனிதர்களை வாங்கி, அவர்களை தனது கற்பனைக்கு ஏற்ப மாற்றி தெருக்களில் டிஸ்ப்ளே செய்து, படம் பிடிப்பதுதான் இவரது ஸ்டைல். புகைப்படம் எடுப்பதுடன் அந்த பொம்மைகளை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவாராம். இவரது ஆர்ட் பீஸ்கள் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதற்கு என்றே தனிக் கூட்டம் அலைகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick