பின்னுறாங்க அகதா!

கலை இராஜ விபீஷிகா

கதா ஓலக்‌ஸியக் (Agata Oleksiak) போலந்து நாட்டில் பிறந்தவர். இப்போது நியூயார்க்கில் வசிக்கிறார்.

அகதாவுக்கு நியூயார்க் நகர மக்களின் கடின உழைப்பும், திறமையை அங்கீகரிக்கும் பண்பும் பிடித்து இருக்கிறதாம். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என கையில் எடுத்த மீடியம்தான் நூல். பாட்டிகள் ஸ்வெட்டர் பின்னுவார்களே.. அதே உல்லன் நூல்தான். ''மிகச் சிறிய நரம்புகள்தானே பின்னிப் பிணைந்து உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் உருவமாக மாற்றுகிறது. நானும் உருவங்களைப் படைக்கிறேன். நரம்புகளுக்குப் பதில், என் கையில் நூல்'' என்று சிரிக்கிறார். பார்க்கும் எல்லாவற்றையும் உல்லன் நூலால் போர்த்திவிடுவதுதான் இவருடைய பாணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick