நிறமற்ற வானவில்! - சிறுகதை

போகன் சங்கர், ஓவியம்: செந்தில்

1

னக்கு ஒரு காபி வாங்கித் தரமுடியுமா?'' எனக் கேட்ட நபர் எனக்குத் தெரிந்தவரா? நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து விலகி, அவனைப் பார்த்தேன். ஒரு மலிந்த பருத்தி குர்த்தாவும் ஜீன்ஸும் அணிந்திருந்தான்; கறுப்புக் கண்ணாடி. அவன் காபி கேட்ட நபர் முகத்தில் வியப்பும் அதிர்ச்சியும் தெரிந்தன. இந்தியாவில் பிச்சைக்காரர்களை ஊக்குவிப்பது பற்றி அவருக்கு ஏதாவது தீவிரமான கருத்து இருக்கலாம். அவர் தனது ஊசலாட்டத்துக்குப் பதில் தேடுவதுபோல, தான் படித்துக்கொண்டிருந்த ஆங்கில தினசரியைக் கடினமாகப் பற்றிக்கொண்டார். பிறகு ஒருமுறை எங்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்தார். 'இவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை ஏன்?’ என்பதுபோல. எதையோ முணுமுணுத்தார்... ''இந்தியாவில் எந்த இடத்தில், எப்படிப் பிச்சை கேட்பார்கள் என எதிர்பார்க்கவே முடியாது.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick