மினாஷே - சிறுகதை

தஞ்சாவூர்க் கவிராயர், ஓவியங்கள்: ஹாசிப்கான்

சுந்தர் புதுசாக கார் வாங்கியிருந்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை... காரைப் பார்க்கவும் அதில் ஒரு ரவுண்டு போய்விட்டு வரவும் எங்களை அழைத்திருந்தான். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் நான்கே பேர்தான். நான், 'சயின்டிஸ்ட் சண்முகம்’, சுந்தர் ஆகிய மூன்று பேரும் அண்ணாசாலையில் ஒரு பிரபலமான வங்கியில் பணிபுரிந்தோம். சண்முகம் எல்லாவற்றுக்கும் அறிவியல் காரணங்களைச் சொல்லக்கூடியவர். அவருக்கு 'சயின்டிஸ்ட் சண்முகம்’ என சுந்தர்தான் பெயர் வைத்தான். எங்களைத் தவிர, பக்கத்தில் இருந்த அரசு அலுவலகத்தில் இருந்து எங்கள் வங்கி கேன்ட்டீனில் காபி சாப்பிட ஓர் இளைஞன் வருவான். அவன் பெயர் திலீபன். நடுத்தர வயதுக்காரர்களான எங்களோடு திலீபன் நட்பு கொள்ள காரணம், எங்களின் கலகலப்புதான். யோகா, சித்தர்கள், அமானுஷ்ய விஷயங்கள் பற்றி எல்லாம் திலீபன் பேசுவான். அடிக்கடி ராமகிருஷ்ண மடத்துக்குப் போவான். சாயங்கால வேளை அங்கே விவேகானந்தரின் 'எழுக துறவியே...’ என்ற பாடலும் தியானமும் சேர்ந்த அனுபவம் எங்களுக்கு அவனால் கிடைத்தது.

 நான் போவதற்கு முன்பே மற்ற இரண்டு பேரும் சுந்தர் வீட்டில் ஆஜராகி இருந்தார்கள். வீட்டுக்கு வெளியே புத்தம் புதுசாக ஓர் அழகான கார் நின்றிருந்தது. புதுசாகக் கல்யாணமான பெண்ணின் உடம்பில் ஒரு நிகுநிகுப்பு இருக்குமே, அப்படி வழவழவென நின்றது வண்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick