ஸ்டைல் சிவகாமசுந்தரி! - சிறுகதை | Style Sivakamasundhari - Short story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ஸ்டைல் சிவகாமசுந்தரி! - சிறுகதை

அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்

யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கெட்  10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம்; வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத் துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவை இல்லை. ஏனென்றால், அவள் வீடு அங்கேதான் இருந்தது. பெயர், சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம், வேம்படி. வருடம் 1965.

தினமும் அவளுடைய அப்பா, அவருடைய காரில் அவளைக் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விடுவார்; மாலையில் மறுபடியும் அழைத்துவருவார். கொழும்புத் துறையில் அவர் ஒருவரிடம்தான் கார் இருந்தது. ஏ30 கார். அது தூரத்தே வரும்போதே சனங்கள் சொல்லிவிடுவார்கள், 'சந்திரசேகரம் புறப்பட்டுவிட்டார்’ என்று. அவருடைய கார் அளவுக்கு அவரும் பிரபலமானவர். அவரிடம் இரண்டு லொறிகள் இருந்தன. அவற்றில் சாமான்கள் கொழும்புக்குப் போகும்; பின்னர் அதே லொறிகளில் வேறு சாமான்கள் திரும்பும். காலையில் அவர் வீட்டு வாசலில் ஒரு கூட்டம் சனம் சாமான்களை வாங்க நிற்கும். 'ஒரு காலத்தில் கொழும்பில் இருந்து நாவாய்களில் சாமான்கள் வந்து இங்கேதான் இறங்கின. அதுதான் 'கொழும்புத் துறை’ என்று பெயர். என்னுடைய பாட்டனுக்கு பாட்டன் செய்ததைத்தான் நான் செய்கிறேன்’ எனப் பெருமையாகச் சொல்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick