காலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்!

வெ.நீலகண்டன் - படங்கள் கே.குணசீலன்

லம்காரி, ஆந்திராவின் பாரம்பரிய ஓவியக்கலை. `கலம்’ என்றால், பாரசீக மொழியில் பேனா. `காரி’ என்றால் சித்திரக்காரர். பேனாவைக்கொண்டு துணியில் வரையும் தனித்துவம்மிக்க சித்திரக்காரரின் கலைதான் `கலம்காரி.’ முற்றிலும் இயற்கை வண்ணங்கள். இயற்கையான இடுபொருட்கள் கொண்டு துணியைக் கவனமாகப் பக்குவப்படுத்தி வரைகிறார்கள். சாதாரண வெண்துணி, கலம்காரி ஓவியனின் கரம்பட்டவுடன் உயிர்ப்புள்ள சித்திரக்கூடமாக உருமாறுகிறது.

 கலம்காரிக்கு சுமார் 3,000 ஆண்டுகால வரலாறு உண்டு. தொடக்கத்தில் இந்தக் கலை, இறைவனுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. கோயில் அலங்காரங்கள், தேர் அலங்காரங்கள், தொம்பைகள், சுவாமி வீதி உலாக்களில் உயர்த்திப் பிடிக்கப்படும் குடைகள் போன்றவை கலம்காரி ஓவியங்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் அரசர்கள் இதைத் தனக்காக்கிக்கொண்டார்கள். அரண்மனை அலங்காரங்கள், ஆடைகள், மேஜை விரிப்புகள் என அடுத்த பரிணாமம் பெற்ற இந்தக் கலை, இன்று நவீன உருவெடுத்து உலகத்தையே வசீகரித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick