மீண்டும் உயிர்த்தெழும் தனுஷ்கோடி!

செ.சல்மான், இரா.மோகன், படங்கள் உ.பாண்டி

ழிப்பேரலையின் அகோரப் பசிக்கு   ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து,  பேரழிவின்  சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.

1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக ஒரு புராணக் காரணம் சொல்லப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு வந்து நீராடுவதைப் பெரும் புண்ணியமாக நினைக்​கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இலங்கைக்குக் கப்பலில் செல்ல எளிதான வழியாக இருந்தது தனுஷ்கோடி. அதோடு, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த நகரின் இயற்கை அமைப்பு அமைந்திருந்தது.

சர்வதேச மக்கள் வந்து செல்லும் துறைமுகப் பட்டினமாக இருந்த தனுஷ்கோடி, இன்று மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற பகுதியாகக் கருதப்பட்டுவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick