“வாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்!”

கள்ளக்குறிச்சி மரச் சிற்பங்கள்!வெ.நீலகண்டன், ச.புகழேந்தி படங்கள்: தே.சிலம்பரசன்

பிற கண்களுக்கு கல்லாகத் தெரியும் பொருளில், கலைஞன் உயிர்ப்புள்ள சிலையைத் தேடுவான். மற்றவர்கள் ஒரு மரத்தின் கனத்தை எடைபோடும் நொடியில், கலைஞன் மனதுக்குள் சிற்பத்தை வடித்துவிடுவான். அந்த வல்லமைதான் கலையின் உச்சம்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் வசிக்கும் அத்தனை மனிதர்களும் அப்படியான உச்சத்தைப்பெற்ற கலைஞர்களாக இருக்கிறார்கள். ஒரு மரத்தைப் பார்த்ததுமே அதற்குள் அடங்கியிருப்பது விநாயகரா, சரஸ்வதியா, வெங்கடாஜலபதியா, கண்ணன்-ராதையா, ஆஞ்சநேயரா, தட்சிணாமூர்த்தியா என்பதைக் கணக்குப்போட்டுச் சொல்லிவிடுகிறார்கள். அவர்களின் கரங்கள் செய்யும் சாகசத்தால் அடுத்த சில மணி நேரங்களில், மரம் சிற்பமாக உயிர்பெற்று நிற்கிறது.

`இந்தியாவின் கலைப்பெருமை’ என்று கள்ளக்குறிச்சி சிற்பங்களைச் சொல்லலாம். உலகம் முழுதும் பயணித்து, மக்களை வசீகரிக்கும் இந்தச் சிற்பங்கள், இந்த மண்ணுக்கே உரிய கலையாக அங்கீகரிக்கப்பட்டு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick