சங்கீத மகாராணி

எம்.எஸ். 100வெ.நீலகண்டன்

ர்னாடக சங்கீதத்தின் மணி மகுடத்தில் விலைமதிப்பற்ற மாணிக்கக் கல்; அனுதினமும் உலகைத் தனது சுப்ரபாதத்தால் துயில் எழுப்பும் இசைக்குயில் என்றெல்லாம் போற்றப்படும்
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு, இது நூற்றாண்டு. விஷ்ணு சகஸ்ரநாமம், சுப்ரபாதம் போன்ற ஸ்லோகங்களைத் தன் மந்திரக் குரலால் பாடி மெய்சிலிர்க்கவைத்தவர். `காற்றினிலே வரும் கீதம்’, `குறையொன்றுமில்லை’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தவர். இளம் இசைக் கலைஞர்களை மட்டுமின்றி, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தையும் தன் இசையால் வசீகரித்தவர். பக்தியும் பாவமும் இணைந்த தனித்துவமான இசை மேதையான எம்.எஸ்., 1916, செப்டம்பர் 16-ம் தேதி பிறந்தார். நூற்றாண்டு கடந்தும் இந்தியாவின் பெருமிதங்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். `கோகில கான இசைவாணி’ என்று அந்தக் காலத்தில் கொண்டாடப்பட்ட எம்.எஸ்-ஸின் பரிபூரண வாழ்க்கையை, பாரதரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண், மகசேசே போன்ற பெருமைமிக்கப் பல விருதுகள் பெருமைப்படுத்தியுள்ளன. இன்று பெரிதும் புகழப்படும் கர்னாடக இசைக்கலைஞர்கள் பலரும் எம்.எஸ்-ஸைப் பார்த்து வளர்ந்தவர்கள். எம்.எஸ்-ஸால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர், எம்.எஸ் உடனான தங்கள் அனுபவங்களை இங்கே நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick