“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி!”

வரவனை செந்தில், படம் அய்யப்ப மாதவன்

காற்றுக்கூட ஈரமில்லாமல் வீசும் வெம்மை மண்ணில் இருந்து குழையக் குழைய மானுடத்தைப் பிசைந்து எழுதியவர், வேல.ராமமூர்த்தி. இன்று, தமிழ் சினிமா இயக்குநர்களின் வான்டட் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். `கிடாரி’யில் வேல்கம்பை எடுத்துக்கொண்டு கொம்பையா பாண்டியனாக கோவணத்துடன் ஓடி வரும்போது தெக்கத்தி தியேட்டர்கள் சாமியாடின. பரமக்குடி தாண்டி,  ஷூட்டிங்கில் இருந்தவரிடம் தீபாவளி மலருக்காகப் பேசினோம்.

``எப்படி இருக்கு சினிமா வாழ்க்கை?’’

``அதுக்கு என்ன, எங்க ஊரு பக்கம் காய்ஞ்சுதான் கெடக்கும். ஆனா, ஒரு மழை போதும், சும்மா கிண்ணுனு வேர் பிடிச்சு பசபசன்னு நிக்கும் பச்சை மிளகா செடி. அது மாதிரி இருக்கு என் மார்க்கெட். இப்ப மீஞ்சூர் கோபி படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். கௌதம் மேனன் இயக்கத்துல `என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்துல தனுஷுக்கு அப்பாவா நடிக்கிறேன். இதெல்லாம் `கிடாரி’க்கு முன்னாடி ஒப்புக்கொண்ட படங்கள். இப்ப 25 இயக்குநர்கள் கதை சொல்லியிருக்காங்க. நான் அந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பேனானு தெரிஞ்சா மட்டுமே சம்மதிக்கிறேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick