இது மாற்று(ம்) கல்வி!

மு.நியாஸ் அகமது

"நீங்க சொர்க்கத்தை அடையப் போறோம்னு பல காலமா ஒரு பாதையில நடந்து போய்க் கிட்டு இருக்கீங்க... ஆனா, பல மைல் நடந்த பிறகுதான் தெரியுது, அந்தப் பாதை சொர்க்கத்துக்கான வழி இல்லைன்னு. இப்ப என்ன செய்வீங்க? பல மைல் நடந்துட்டோம்னு நீங்க போற பாதையிலேயே பயணத்தைத் தொடர்வீங்களா... இல்லை பாதையை மாத்துவீங்களா? இப்ப நம்ம கல்வி முறை சொர்க்கத்துக்கு அழைச்சுட்டுப் போற பாதையா இல்ல. ஆனா, நாம் அதுலதான் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கோம்.  அதுவும் முன்பைவிட அதி வேகமா நடந்து போய்க்கிட்டு இருக்கோம்’’ - ஒரு சூஃபி ஞானியைப் போல் தன் உரையாடலைத் தொடங்குகிறார் கெளதம்.

கெளதம் சாரங்... கேரள மாநிலம் அட்டப்பாடியில் வசிக்கிறார். இவருடைய பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். ஆனால், இவர் பள்ளிக்கே சென்றது இல்லை. பள்ளிக்குச் செல்லாவிட்டால் என்ன? நான்கு மொழிகள் சரளமாகப் பேசுகிறார்; இணையதளம் வடிவமைத்துத் தருகிறார்; புகைப்படம் எடுக்கிறார்; தச்சுவேலை செய்கிறார்; பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்; தண்ணீர் மேலாண்மையில் பல தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார். கல்வி முறையால் மட்டும்தான் சாத்தியமாகக்கூடியது என்று நாம் நம்பும் பல விஷயங்களை அட்டப்பாடியில் ஒரு சிறு வனத்தில் அமர்ந்துகொண்டு பள்ளிக்கே செல்லாமல் சாத்தியமாக்கிக்கொண்டிருக்கிறார் கெளதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick