மணியோசை! | Dedication For Late Palakkad Mani Iyer - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

மணியோசை!

வீயெஸ்வி

சைக்கலைஞர்கள் முப்பது பேர் ஒரே மேடையில் மூன்று மணி நேரம் அரிதாரம் பூசி, பாடி, நடித்த அதிசயம் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை மியூசிக் அகாடமியில் நடந்தது! இந்த ‘சரித்திர’ நிகழ்வை சாத்தியமாக்கியவர், இசையுலகில் வரலாறு படைத்த மிருதங்க மாமேதை மறைந்த பாலக்காடு மணி ஐயர்!

சிறிது ஃப்ளாஷ்பேக்குவோம்...

2012-ம் வருடம் ஜூன் மாதத்தில் பாலக்காடு மணி ஐயருக்கு நூற்றாண்டு விழா நடந்தது. சென்னையில், மும்பையில், டெல்லியில், பாலக்காட்டில் எனப் பல்வேறு இடங்களில் மணி மணியான நிகழ்ச்சிகள். அந்தச் சமயத்தில் யோசனை ஒன்று தோன்றியது, பாலக்காடு மணியின் மகள் வயிற்றுப் பேத்தியும், பிரபல கர்னாடக இசைப் பாடகியுமான நித்யஸ்ரீ  மகாதேவனுக்கு.

‘`தாத்தாவின் வாழ்க்கைக் கதையை, அவர் பிறப்பிலிருந்து, உச்சம் தொட்ட வரையிலான வரலாற்றை ஏன் ஓர் இசை நாடகமாகத் தயாரித்து அந்த மாமனிதருக்கு என்னுடைய அஞ்சலியாக செலுத்தக் கூடாது என்று நினைத்தேன். தாத்தாவுடன் நான் அதிகம் பழகியது கிடையாது; அவர் மடியில் உட்கார்ந்து சீராடியதில்லை. என்னுடைய ஏழாவது வயதில் அவர் இயற்கை எய்திவிட்டார். அந்த ஏழு வருடங்கள்கூட அவர் அதிகம் தங்கியிருந்தது ரிஷிவேலியில். இந்த ‘பயோ-பிக்’கில் அந்தந்தக் காலகட்டம் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நம்பகத்தன்மை கெடாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என் அம்மா லலிதா சிவக்குமாரும், தாய் மாமாக்கள் ராஜாமணியும், ராஜாராமும் எனக்கு பக்கபலமாக இருந்து எனக்குத் தேவையான விவரங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள்...” என்கிறார் நித்யஸ்ரீ, நிறைவான குரலில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick