இரவாடிகளின் நூலகம்

இனியன்

ந்தப் படங்களைப் பார்த்தால், எப்படித் தெரிகிறது? அரண்மனை... கொலேசியம்... ஐடி கம்பெனி..? நம்புங்கள் பாஸ். எல்லாமே நூலகங்கள்!

நெதர்லாந்த், `ஹேக்' நகரத்தில் இருக்கிறது ஹேண்டலிஞ்சன்கேமர் (Handelingenkamer) நூலகம். 19-ம் நூற்றாண்டில் இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. நாட்டின்  பாராளுமன்ற உரையாடல்கள், விவாதங்கள், இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு இங்கே   பாதுகாக்கப்படுகின்றன. இந்த நூலகம் கட்டப்பட்ட காலத்தில் மின்சார வசதி இல்லை. மண்ணெண்ணெய்  விளக்குகளைப் பயன்படுத்தினால், தீ விபத்து நேர்ந்து  ஆவணங்கள் அழிந்துவிடும் அபாயம் உண்டு. எனவே, ஒளியை ஊடுருவும் தன்மை கொண்ட விசேஷக் கண்ணாடிகளால் இந்த நூலகத்தின்  மேற்கூரையை அமைத்தார்கள். நான்கு தளங்களைக் கொண்ட இந்த நூலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கை ஒளியைக் கொண்டே படிக்க முடியும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick