இனிக்க இனிக்க வரலாறு

முகில் - படங்கள்: எல்.ராஜேந்திரன், எம்.விஜயகுமார்

தேன். ஆதி மனிதன் அறிந்த முதல் இனிப்புப் பொருள் நிச்சயம் இதுவாகத்தான் இருக்க முடியும். தேனின் மூலமாகவே மனிதன் இனிப்பு என்ற சுவையின் முழுமையை அறிந்திருப்பான். பின், மாவுடன் தேன் சேர்த்து உணவு தயாரிப்பது என்பது உலகின் முதல் இனிப்புப் பண்டமாக இருந்திருக்கக்கூடும். தேனுக்கு அடுத்ததாக இனிப்பின் இடத்தைப் பிடிப்பது கரும்பு - கரும்புச் சாறு. கரும்புச் சாற்றைப் பாகாகக் காய்ச்சி, அதை இடித்த மாவோடு சேர்த்து இனிப்பு தயாரிப்பது என்பது அடுத்தகட்ட வளர்ச்சி. மா உருண்டை, பொரிவிளங்காய், கட்டி அரிசி இதெல்லாம் அந்த வகையில் செய்யப்பட்ட பழந்தமிழ் இனிப்புகள். இதே மாவுடன் சூடான பாகைச் சேர்த்து, பதமான கலவையாகக் கூட்டி, அதை எண்ணெயில் பொரித்தெடுத்து அதிரசம் போன்ற இனிப்புகள் செய்யப்பட்டன. வேகவைத்த தானியங்களுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்படுவது கும்மாயம். குழைவாக வேகவைத்த பருப்பு என்பதே கும்மாயத்துக்கான பொருள். அதன் இன்னொரு வடிவமே பாயசம். அதன் முக்கிய சேர்மானம் பாலும் நெய்யும். பாலோடு சர்க்கரையும் நெய்யும் கலந்து இனிப்புகள் செய்யப்படுவதும், பாலைத் திரியவைத்து, அதில் இனிப்பு கலந்து பதார்த்தங்கள் செய்யப்படுவதும் பண்டைக் காலத்திலிருந்தே இருப்பதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick