இனிப்பு நல்லது!

எம்.மரிய பெல்சின் படங்கள் ஏ.சிதம்பரம்

ணவே மருந்து என வாழ்ந்தவர்கள் தமிழர்கள். நம் மூதாதையரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்ததற்குக் காரணம், அவர்களின் திட்டமிட்ட உணவு முறையே! இன்றைக்கு அந்த உணவுப் பண்பாடு குலைந்துவிட்டது. ஆனாலும், சில உணவுப் பொருட்கள் மட்டும் காலம் கடந்து, தன் வீர்யம் குறையாமல் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கருப்பட்டி!  முந்தைய நாட்களில் காபி, டீ போன்ற பானங்களாகட்டும்... விசேஷ நாட்களின் இனிப்புப் பலகாரங்கள் ஆகட்டும்... கருப்பட்டியில்தான் செய்வார்கள்.   அதனால், அவை வெறும் பலகாரங்களாக இல்லாமல், குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் மருந்தாகவும் இருந்தன. தமிழ்நாட்டில், திருச்செந்தூருக்கு அருகே உள்ள உடன்குடியில்தான் கருப்பட்டி அதிகம் தயாரிக்கப்படுகிறது.

பனையில் இருந்து கிடைக்கும் பதநீரை பெரிய வாணலியில் ஊற்றி நன்றாக காய்ச்சுவார்கள். பாகு பதத்துக்கு வந்ததும், கொட்டாங்கச்சி அச்சில் ஊற்றினால், கருப்பட்டி தயாராகிவிடும். இதே முறையில்  சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துக் காய்ச்சினால் அது சுக்கு கருப்பட்டியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick