ஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்!

ரெசிபி ராணி சந்திரலேகா ராமமூர்த்தி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்

மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த விதி, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்துக்கும் பொருந்தும். கொண்டாட்டங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

பட்டாசில் இருந்து பட்டுப்புடவை வரைக்கும் தீபாவளிக்கு தீபாவளி புதுசு புதுசாகத் தேடி வாங்குகிறவர்கள், தீபாவளி ஸ்வீட்ஸ் விஷயத்தில் மட்டும் ஓரவஞ்சனையாக இருக்கலாமா?

அதிரசத்தையும் அக்காரவடிசலையும் மறந்து, இந்த வருட தீபாவளிக்கு கொஞ்சம் புதியதாகத்தான் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

`என்ன செய்யலாம்... எப்படிச் செய்யலாம்?’ எனக் கேட்பவர்களுக்கு கலர்ஃபுல்லாக, கலக்கலாக ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் செய்துகாட்டியிருக்கிறார் `ரெசிபி ராணி’ சந்திரலேகா ராமமூர்த்தி.

இந்த வருடம் உங்கள் வீட்டு தீபாவளி சம்திங் ஸ்பெஷலாக இருக்கட்டுமே...

ஹேப்பி தீபாவளி!

ராஜ் மஞ்சூரி பிட்டா

தேவையானவை -

மேல்மாவுக்கு:


மைதா - 1 1/4 கப்
ரவை - 1/4 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்.
பூரணத்துக்கு:
துருவிய தேங்காய் - 1/2 கப்
இனிப்பு இல்லாத கோவா - 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடித்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 6
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்.
பாகு செய்வதற்கு:
சர்க்கரை - 1 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய், குங்குமப்பூ - சிறிதளவு.
பொரிப்பதற்கு:
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
அலங்கரிக்க:
பிஸ்தா, வெள்ளிச் சரிகை (பெரிய ஸ்டோர்களில் கிடைக்கும்).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick