கடவுளின் தோட்டம்! - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்

தமிழ்

கேரளாவை ‘கடவுளின் தேசம்’ என்று சொல்வார்கள். ‘கடவுளின் தோட்டம்’ எது தெரியுமா?  மேகாலயா மாநிலத்தில், ‘மாவ்லின்னாங்’ (Mawlynnong) நகரம். 2003-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இப்போது வரை ‘ஆசியா கண்டத்தின் சுத்தமான கிராமம்’ என்கிற விருதைத் தக்கவைத்திருக்கிறது மாவ்லின்னாங்.

மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகரத்தில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கிறது மாவ்லின்னாங். இங்கு குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதுபோல, சுத்தத்தையும் கற்றுத்தருகிறார்கள். மாவ்லின்னாங்கில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் மாதிரி ‘சுத்தம்’ என்கிற சப்ஜெக்ட்டும் ஒரு பாடம். இதில் கிரேடு-1, கிரேடு-2-வில் ஃபெயில் ஆகும் மாணவர்கள் யாரிடமும், அந்த ஊரில் உள்ள 95 குடும்பங்களும் ‘அன்னம் தண்ணி’ புழங்க மாட்டார்கள். அதாவது, தயவுதாட்சண்யம் பார்க்காமல் குழந்தைகளாக இருந்தாலும் உணவு, தண்ணீர் கிடைக்காதாம். ‘‘குழந்தைகள் மனது ஈரமான தரை மாதிரி; அவர்கள் மனதில் என்ன பதியவைக்கிறோமோ, அதுதான் கடைசி வரை ஆழமாகப் பதிந்திருக்கும்! அதனால்தான் குழந்தையாக இருக்கும்போதே சுத்தத்தைப் பற்றி அவர்கள் மனதில் பதியவைக்கிறோம்!’’ என்கிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

வெற்றிலை குதப்பிய வாயில் இருந்து சிவப்புக் கலரில் குற்றாலத்தைத் தெறிக்கவிடுவது, காலி சிப்ஸ் பாக்கெட்களை நசுக்கித் தூர எறிவது, தெருவில் சிறுநீர் கழிப்பது என்று எந்த ‘ச்சீய்’ விஷயங்களையும் மாவ்லின்னாங் கிராமத்தில் பார்க்க முடியாது. அப்படியே குப்பைகள் காணப்பட்டாலும்,  ‘இது எங்க ஏரியா கன்ட்ரோல்ல வராது’ என்று தொகுதி பாகுபாடு எல்லாம் பார்க்காமல், 95 குடும்பங்களில் உள்ள 500 பேரில் யார் வேண்டுமானாலும், பாரபட்சம் பார்க்காமல் விளக்குமாறைக் கையில் எடுக்கிறார்கள். நீங்கள் மாவ்லின்னாங்குக்கு எப்போது சென்றாலும், குறைந்தபட்சம் இருவரையாவது விளக்குமாறும் கையுமாகப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick